உங்கள் வீட்டிற்கு வந்து போகும் பெண்களுக்கு இந்த ஒரு பொருள் மட்டும் மறவாமல் கொடுத்து அனுப்புங்கள் நண்பர்களே......
இவ்வாறு செய்வதால் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேருமாம் உங்களுக்கு தெரியுமா....
பொதுவாக நம் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் , குங்குமம் தவறாமல் கொடுத்து வழி அனுப்புவது நமக்கு தெரிந்த பாரம்பரிய வழக்கம் .
அதுபோலவே பெண்களை தவிர வேறு யார் வீட்டிற்கு வந்தாலும் முதலில் ஒரு சொம்பு தண்ணீர் கொடுப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு நியதி...
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தால் அது ஏழேழு பிறவிக்கும் அதற்குரிய புண்ணிய பலன் என்பது நமக்கு வந்து சேரும் என்பது அனைவரும் அறிந்த ஆன்மீக நம்பிக்கை....
இந்த வகையில் நம் வீட்டிற்கு வரும் பெண்களிடம் இந்த ஒரு பொருள் கொடுத்து அனுப்பினால் வற்றாத செல்வம் வந்து கொண்டே இருக்கும் என்கிறது சாஸ்திரங்கள்..... அது என்ன பொருள் என்பதை காணலாம் வாருங்கள் நண்பர்களே.......
விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடுகளில் தலைசிறந்த ஒன்றாகும்... முந்தைய காலங்களில் திண்ணை வைத்த வீடுகள் தான் அதிகம் இருக்கும் அதற்கு காரணம் வழிப்போக்கர்கள் , யாத்திரை மேற்கொள்ளும் வயோதிகர்கள் இளைப்பாறுதலுக்கு ஏற்றவாறு திண்ணை அமைத்து வைத்தனர்....
அவர்கள் அங்கு வந்து அமரும் போது அவர்களுக்கு வயிறார உணவு பரிமாறினால் நம்மை எத்தகைய பிரச்சினைகளும் நெருங்க கூட முடியாத படி இறைவன் நம்மை மற்றும் நம் பரம்பரையை காப்பார் என்று தமிழர்கள் ஆழமான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்.....
அடுத்தவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட நம் முன்னோர்கள் வாழ்ந்த இம்மண்ணில் இன்று நாம் நம் சொந்த இரத்தத்திற்கு கூட உதவி செய்வதில் பாரபட்சம் பார்க்கிறோம் என்பதும் வேதனை தரக்கூடியது தான்...
மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது தவறில்லை தான்...
ஆனால் நாம் புண்ணியத்தை குறைத்தும் பாவத்தை அதிகரித்து கொண்டே செல்வது வருங்காலத்திற்கு நல்லதல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும்.......
ஆகவே வீட்டிற்கு வரும் சொந்த பந்தம், உற்றார் உறவினர், நண்பர்கள் என யாராக இருந்தாலும் சரி வீட்டிற்கு வந்தவுடன் ஒரு சொம்பு தண்ணீர் முதலில் பருக கொடுக்க வேண்டும்.
அல்லது குளிர்ந்த மோர் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் வயிறு குளிரும்... அவர்கள் மனமும் குளிரும்....
பொறாமை குணத்துடன் நமது வீட்டிற்கு வந்திருந்தால் நாம் அவர்களை கவனிக்கும் முறையில் அவர்களின் குணம் மாறி நம்மிடம் நட்புடனும் பகை மறந்து சகஜமாக பழக ஆரம்பிப்பார்கள் நம்மை வாழ்த்தவும் செய்வார்கள்....
அதுபோலவே வயதில் பெரியவர்கள் அல்லது வயது குறைந்தவர்கள் என யாராக இருந்தாலும் பெண்கள் நம் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்ப வேண்டும்.
அப்படி தாம்பூலம் கொடுக்க முடியாத பட்சத்தில் ஒரு மஞ்சள் கிழங்கு கொடுத்து அனுப்பலாம். அவ்வாறு மஞ்சள் கிழங்கு கொடுத்து வழி அனுப்புவது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் தடையில்லாமல் நடப்பதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும்.....
அந்த வகையில் நமது வீட்டில் எப்போதும் வற்றாத செல்வம் பெருகி கொண்டே இருக்க அப்பெண்களுக்கு மருதாணி கொடுப்பது அல்லது மருதாணி பவுடர் கூட கொடுப்பது செல்வம் தழைத்து இருக்க நாம் செய்யும் ஒரு அற்புதமான பரிகாரங்களில் ஒன்றாகும்......
மருதாணி என்பது மங்கலத்தின் ஒரு அடையாளம்.... மருதாணி பெண்களுக்கு அழகு தருவது மட்டுமல்ல ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு பொருள் ஆகும். மனதை மகிழ்ச்சியாகவும் இறுக்கம் இல்லாமலும் வைத்திருக்க கூடிய அற்புதமான தெய்வீக மூலிகை ஆகும்.....
மருதாணியில் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள் என அனைவருக்கும் தெரியும்.... எனவே நம் வீட்டிற்கு வரும் பெண் என்கிற மகாலட்சுமிகளுக்கு நீங்கள் மருதாணி கொடுத்து அனுப்பினால் மகாலட்சுமி அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.....
அத்துடன் வீட்டில் எப்போதும் வறுமை இல்லாமல் செல்வம் தழைத்து வற்றாத செல்வம் பெறுவர் என்பது ஆன்மீக சூட்சுமம் ஆகும்.....
ஆகவே யார் எவராக இருந்தாலும் நமது வீட்டிற்கு வந்தவுடன் முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுடைய வயிற்றை முதலில் குளிர வைத்து
அதே இன்முகத்துடன் தாம்பூலம் அல்லது மஞ்சள் கிழங்கு அல்லது மருதாணி ஆகிய மங்களப் பொருட்களில் ஏதாவது கொடுத்து வழி அனுப்புவது நமக்கும் நம்மை தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு ஏழேழு பிறவிக்கும் நாம் தேடி வைக்கும் புண்ணியம் ஆகும்.....
வாழ்க வளமுடன்......
நன்றி.......