அவரைக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....
இனிமேல் காய் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.....
பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை எப்படி சமைக்க வேண்டும் என்பது தான்....
நேற்று செய்த உணவை இன்றும் சமைக்க முடியாது ஆனாலும் வீட்டில் என்ன தான் காய்கறிகள் அதிகமாக இருந்தாலும் ஒரு நாள் செய்த உணவை மறுபடியும் அதே சுவையில் மறுநாள் சமைத்து சுடச்சுட செய்து கொடுத்தாலும்
வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள்.
அதுபோலவே காய்கறி பொரியல், கூட்டு என்றால் அதனையும் விரும்பி யாரும் சாப்பிடுவது கிடையாது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள்....
எப்படியாவது காய்கறிகள் குழந்தைகளை சாப்பிட வைத்து விட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கும்...
அதனால் என்ன செய்ய முடியும்? தினமும் அசைவ உணவை சமைத்துக் கொடுக்கவும் முடியாது அல்லவா....
எனவே நாம் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்களாவது வீட்டில் உள்ள காய்கறிகள் வைத்து தான் உணவுகளை சமைத்து தர வேண்டியிருக்கும்.
மதிய நேரத்தில் சாப்பிடும் உணவுக்கு சைடிஷ்சாக சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ள இப்படி சுவையான அவரைக்காய் பொரியலை ஒரு முறை செய்து பாருங்கள் .
அவரைக்காய் இருக்கும் சத்துக்களும் நார்ச்சத்து நிறைந்த இந்த அவரைக்காய் மலச்சிக்கல் மற்றும் செரிமான மண்டலம் பெரிதும் உதவுகிறது.
இத்துடன் அவரைக்காய் நமத உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் வெள்ளெழுத்து நோய் குணமாகும்.
இரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது. இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் அவரைக்காய் அதிகம் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது.
அதிலும் அவரைக்காய் பிஞ்சு காயில் துவர்ப்பு சுவை இருப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்தும் மிகவும் உதவுகிறது.
அவரைக்காய் எப்படியாவது பொரியல் கூட்டு குழம்பு வகையில் செய்து சாப்பிட வேண்டும்.
இந்த பொரியலின் சுவைக்கு அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க நண்பர்களே....இந்த அருமையான அவரைக்காய் பொரியலை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.....
தேவையான பொருட்கள்:
அவரைக்காய் : 1/2 கி
பெரிய வெங்காயம் : 2
தக்காளி:1
பூண்டு: 5 பல்
எண்ணெய் : 4 ஸ்பூன்
கடுகு :அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு :1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் :1 ஸ்பூன்,
உப்பு : தேவையான அளவு
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லித்தழை :சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ அவரைக்காயை எடுத்துப் பொடியாக நறுக்கி, தண்ணீரில் சேர்த்து சுத்தமாக அழுத்தி தண்ணீர் இல்லாமல் இறுத்து வைக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் 5 பல் பூண்டை தோலுரித்து அதனை சிறிய உரலில் வைத்து இடித்து கொள்ள வேண்டும்.இதனை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாகப் காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை ஆகியவற்றை சேர்த்துப் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
கூடவே நாம் நசுக்கி வைத்து இருக்கும் பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதங்கியதும் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள அவரைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அவரைக்காயுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி விட்டு 10 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.
அதன் பின்னர் மூடியைத் திறந்து அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கடைசியாக கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிக் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் நண்பர்களே.....
சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.....
இதனை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம் சூப்பராக இருக்கும்.
இந்த முறையில் அவரைக்காய் பொரியலை செய்து உங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட கொடுத்து பாருங்கள்.
காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்....