மீன் குழம்பு பிடிக்காதவர்கள் யாருமில்லை!
இன்றைய தலைமுறையினருக்கு நாம் கொடுப்பது ஆரோக்கியமான உணவு மட்டுமே!!
முள்ளும் ஸ்மெல்லும் அதிகம் உள்ள மீன் குழம்பு தான் சுவை அதிகமாக இருக்கும்!
இன்னும் சுவை அதிகரிக்க முதல் நாள் மாலை மீன் குழம்பு செய்து வைத்து அடுத்த நாள் காலை சாப்பிடும் மீன் குழம்பின் சுவை சொல்லவா வேணும்!
பக்கத்து வீட்டு மீன் குழம்பு வாசனை பிடித்து கொண்டு நம்ம வீட்டு ரசசாதம் சாப்பிட்டுரலாம்!
மீன் குழம்பு பெயரை கேட்கும் போது நாக்கில் தானாகவே எச்சில் ஊறும்! பசி வயித்த கில்லும் என்பர்!
வாங்க நண்பர்களே! ருசியான மீன் குழம்பு சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்!!
மீன் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
- மீன்: 1/2 கி
- புளிக் கரைசல்: கோலி அளவு புளி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
- வெங்காயம்: 2
- தக்காளி: 3
- பூண்டு: 10 பல்
- எண்ணெய்:தாளிக்க தேவையான அளவு
- கடுகு: 1 ஸ்பூன்
- வெந்தயம்: 1 ஸ்பூன்
- சீரகம்: 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்: 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
- தனியா தூள்: 2 ஸ்பூன்
- குழம்பு மிளகாய் தூள்: 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை:தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் மீனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஊற விடவும்.
(ஏனெனில் மீனில் உப்பு ஊறி உடனடியாக குழம்பு மீன் சாப்பிட அருமையாக இருக்கும்)
அடுப்பை பற்ற வைத்து மண் சட்டையை வைக்க வேண்டும்.( கடாய் இருந்தாலும் பரவாயில்லை)
(மண் சட்டியாக இருந்தால் குழம்பு வாசம் தெரு வரை வீசும்)
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொறிந்ததும் சீரகம்1 ஸ்பூன் சேர்த்து
நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து கலந்து நன்றாக வதக்கவும்.
பின்னர் தக்காளி, பூண்டு சேர்த்து கொள்ளவும்
வதங்கியதும் மஞ்சள் தூள்,
தனியா தூள் ,மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் கரைத்து வைத்து உள்ள புளிக் கரைசல் சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பதம் பார்த்து கொள்ளவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து
10-15நிமிடங்கள் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து சட்டியில் ஓரங்களில் படியும். அப்போது குழம்பு கொதித்து விட்டதென்று அர்த்தம்.
அப்பொழுது மீனை சேர்த்து கொள்ளவும்
மீன் 8 நிமிடம் போதுமான நேரம். (கண்டிப்பாக அடுப்பை மிதமான
சூட்டில் வைத்து கொள்ள வேண்டும்)
7 நிமிடங்கள் கழித்து அடுப்பை அனைத்து விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடவும்.
( இதற்கு சொலவடையே உண்டு
என்றென்றும் பக்கத்து வீட்டு மீன் குழம்பு தான் கமகமக்கும் சுவையூட்டும்! )
இவ்வாறு நம்முடைய கிராமத்து மீன் குழம்பு சுலபமாக செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தலாம்! வாழ்த்துக்கள்!
நண்பர்களே! நன்றி!!