விளக்கு ஏற்றிய பிறகு மீதமாகும் எண்ணெயை கீழே ஊற்றுபவர்களா நீங்கள் தெரிந்தும் கூட இப்படி ஒருபோதும் செய்யாதீர்கள்......!
பூஜை செய்து மீதமாகும் எண்ணெய் கீழே ஊற்றினால் என்ன ஆகப் போகிறது என்ற எண்ணத்தில்.......
ஒரு முறை கூட இந்த தவறான செயலைச் செய்து நமக்கு நாமே பாவத்தை சேர்த்து கொள்ளாமல் இருக்க வேண்டும் எனில் ...
அதனை இப்படி பயன்படுத்தி புண்ணியம் பெறுவது பற்றி....
இந்த பதிவை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே......
அனைவரும் வீட்டில் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது விளக்கு ஏற்றுவது உண்டு....
இவ்வாறு வீட்டில் 1,2,5,9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது ...
இந்த தீபங்களில் தீபம் ஏற்றுவதற்காக சேர்க்கப்படும் எண்ணெய் எப்போதும் முழுவதும் தீர்ந்து போகாமல் சிறிதளவாயினும் மீதமாகும்.
பூஜைக்கு உபயோகிக்கும் பாத்திரங்கள் பூஜை பொருட்கள் எல்லாம் வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
அப்படி சுத்தம் செய்யும் போது விளக்குகளில் இருக்கும் எண்ணெய் எப்போதும் தனியாக எடுத்து வைப்பார்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.
ஆனால் பெரும்பாலானோர் இப்படி பயன்படுத்திய எண்ணெய் கீழே ஊற்றி விடுகின்றனர். இவ்வாறு செய்வதைசெய்வது மிக தவறான செயலாகும்.
இது நமக்காக பாவத்தை நாமே சேர்ப்பது போல ஆகும் நண்பர்களே......
இது போல செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். இறைவனுக்கு ஏற்றிய தீபத்தின் மீதமாகும் எண்ணெயை கீழே ஊற்றி விடுவது என்பது பாவத்தை சேர்ப்பதற்கு சமமாகும்.....
இனி இந்த பதிவில் மீதமாகும் எண்ணெயை கீழே ஊற்றி விடாமல் எப்படி என்ன செய்வது என்று பார்க்கலாம்.....
வீட்டில் இருக்கும் பெண்கள் காலை எழுந்து குளித்து விட்டு அப்படி காலையில் குளிப்பது உடலுக்கு ஒத்துக்காதுஎன்றால் பரவாயில்லை
பல்துலக்கி முகம் , கை, கால்கள் கழுவி விட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு ஒரு அகல் விளக்கை ஏற்றி வைப்பது சிறந்த பலனைக் கொடுக்கிறது....
அந்த நாளையே மிகவும் மகிழ்ச்சியான, அமைதியான நாளாகவும் முன்னேற்றம் தரும் நாளாகவும் அமைத்து தருகிறது....
இப்படி தினமும் விளக்கு ஏற்றி வந்தால் வீடு சுபிட்சம் பெற்று நீங்கா ஐஸ்வர்யத்துடனும் இருக்கும். இப்படி பூஜை செய்வதற்காக பயன்படுத்தும் விளக்குகளில் இருக்கும் எண்ணெய் முறையாக பயன்படுத்த வேண்டும்.....
எடுத்து வைத்த பழைய எண்ணெயைக் கொண்டு மீண்டும் பூஜை அறையில் உள்ள விளக்கில் தீபம் ஏற்றக் கூடாது.அதே சமயம் கீழே ஊற்றி விடவும் கூடாது.
அப்போது இந்த எண்ணெய் என்னதான் செய்வது என்று பெண்களில் பலருக்கு சந்தேகம் வரலாம்...
வீடு சுபிட்சமாக இருப்பதற்கு ஒரு சில ஆன்மீக வழிபாடுகளை இல்லங்களில் செய்வது உண்டு...
அவ்வாறு காலை எழுந்தவுடன் முதலில் உள்ளங்கை பார்ப்பது....
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூபம் காண்பிப்பது....
மாலை நேரத்தில் சரியாக விளக்கு ஏற்றுவது....
என ஐஸ்வர்யம் பெருக காரணமாக இருக்கும் என பல செயல்களை வீட்டில் உள்ள பெண்கள் செய்ய வேண்டும்.....
அது போலவே மாலை நேரத்தில் ஒரு சில வீடுகளில் நிலை வாசலில் தீபம் ஏற்றுவார்கள். . இப்படி செய்வது ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த குடும்பத்திற்கும் நன்மைகள் பல வாரி வழங்கும்.....
அப்படி நிலை வாசலில் ஏற்றப்படும் தீபம் பூஜை அறையில் ஏற்படும் விளக்கின் மீதமான எண்ணெயில் ஏற்றலாம். இவ்வாறு ஏற்றுவது மிகுந்த நன்மை கொடுக்கிறது.....
அதுபோலவே ஒரு பத்து நிமிடங்கள் ஆவது நமது சமையல் அறையில் ஒரு அகல் தீபம் தினமும் ஏற்றுவது பல நன்மைகளை அள்ளி தர வல்லது....
அதிலும் நாம் பூஜை அறையில் மீதமுள்ள எண்ணெய் இதில் ஊற்றி தீபம் ஏற்றலாம்....
அது மட்டுமல்ல அனைவரின் வீட்டில் உருளியில் பூ போட்டு வைப்பது பழக்கமாக இருக்கும்.
அதனுடன் அருகில் சிறிய அகல் விளக்கில் பூஜை அறை விளக்கில் ஊற்றிய பழைய எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்....
இவ்வாறு மீதமுள்ள பழைய பூஜை எண்ணெய் என்ன செய்வது தெரியாமல் இருந்தால் இப்படி பயன்படுத்தி பாருங்கள் நண்பர்களே.....
வாழ்க வளமுடன்.......