தலை முடி பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி செய்ய கூடிய அருமருந்து.... இந்த எண்ணெய்
தலைக்கு தேய்த்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா......!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் முடி உதிர்தல் என்பது மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி உதிர்தல் தடுக்க ஏகப்பட்ட இயற்கையான வைத்தியங்கள் உள்ளன.
இனி உங்கள் முடிக் கொட்டாது.... ஏனெனில் மலிவான விலையில் கிடைக்கும் இந்த அற்புதமான எண்ணெய் நாம் ஏன் தலைக்கு இத்தனை நாள் வரை தேய்த்து வரவில்லை என்று அனைவரும் இனிமேல் யோசிப்பீர்கள்......
அவ்வளவு நன்மைகள் இந்த ஒரு எண்ணெயில் அடங்கியுள்ளது......
விலை உயர்ந்த பொருட்கள் தான் பலன் தரும் என்ற எண்ணம் நம்மில் எல்லோருடைய மனதிலும் இப் இருக்கத்தான் செய்யும் .
நிறைய காசு கொடுத்து அதிக விலையில் விற்பனை செய்யும் பல வகையான எண்ணெய் மற்றும் தலை முடி உதிர்தல் பிரச்சினைகளை சரிசெய்ய விற்பனை ஆகும் பொருட்களை எல்லாம் உபயோகித்து அலுத்துப் போய்விடும்...
விலை உயர்ந்த விளம்பரம் செய்ய கூடிய ஷாம்பு வாங்கி தேய்த்து வந்தால் தான் தலை முடி அடர்த்தியாக வளரும் என்று அப்படி எல்லாம் கிடையாது.....
இயற்கையாக மலிவாக நமக்கு கிடைக்கும் பொருட்களில் இருக்கும்
சத்துக்கள் தான் அதிகம் உள்ளது.
காசு குறைவு என்று சில பொருட்கள் நாம் சந்தேகத்துடன் ஒதுக்கி வைக்கின்றோம் இப்படி செய்வது தவறான செயல்.
தெருக்களில் இருக்கும் கடைகளில் கூட கிடைக்கும் என்ற ஒரு பொருளின் நன்மைகள் பற்றியும் அதனை எப்படி உபயோகிப்பது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க நண்பர்களே......
மலிவான விலையில் தெரு கடையில் கூட கிடைக்கும் ஒரு பொருள் தான்
வேப்ப எண்ணெய்........
வேப்ப எண்ணெய் என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்...
இதை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்... வேப்ப எண்ணெய் வேப்ப மரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் காய் அதாவது வேப்பங்கொட்டை இலிருந்து நமக்கு எண்ணெய் செக்கு ஆட்டி கிடைக்கும் எண்ணெய் வேப்ப எண்ணெய்......
வேப்பங்காய் கசப்பு தான்... அனைவருக்கும் தெரியும். ஆனால் நமக்கு அழகு ஆரோக்கியம் தருகிறது.
அவை அதிக வளத்தையும் கிருமி நாசினியாக பலன் தருகின்றன.....
அதிலிருந்து கிடைக்கும் வேப்ப எண்ணெய் அனைவருக்கும் தெரியும்.....
நம்மில் எத்தனை பேர் சிறு வயது முதல் வேப்ப எண்ணெய் தலைக்கு தேய்த்து குளித்து இருந்திருப்போம்...
பத்தில் ஒருத்தர் கூட கிடையாது.... எனலாம்..
ஆமாம் தானே...
ஆனால் வேப்ப எண்ணெய் தலைக்கு வைப்பது என்றால்....
எதற்காக வைப்போம் தீராத பேன் பொடுகு தொல்லைக்காக அன்றைய காலகட்டத்தில் தலைக்கு வைத்தனர்.....
இப்படி வேப்ப எண்ணெய் தலைக்கு வைப்பது நின்று விட்டதால் தான் இன்றைய சூழலில் நாம் அனைவரும் பொடுகு,பேன், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த கெமிக்கல் கலந்து விற்கப்படும் ஷாம்புகளை வாங்கி தலைக்கு தேய்த்து நல்லா இருந்த முடியைக் கூட கொட்ட செய்கின்றோம்......
சரி இதற்கு என்ன தான் தீர்வு என்றால் வேப்ப எண்ணெய் தலைக்கு எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம் ஆனால் அதற்கு முன்னாடி வேப்ப எண்ணெய் யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்று பார்க்கலாம் வாங்க.....
1. அதிக உடல் சூடு கொண்டவர்கள்....
2. சாதாரண நிலையில் கூட உடல் உஷ்ணம் உள்ளவர்கள்
3. கர்ப்பம் தரித்த பெண்கள்
4. குழந்தை பிறக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள்
5. முகத்தில் எண்ணெய் பசை உள்ளவர்கள் மற்றும் முகப்பரு
அதிகமாக முகத்தில் வேப்ப எண்ணெய் படியும் அளவுக்கு எண்ணெய் பயன்படுத்தி கூடாது.
சரி இனியும் தாமதிக்காமல்.... எவ்வாறு வேப்ப எண்ணெய் பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம் வாங்க....
முதலில் சுத்தமான வேப்ப எண்ணெய் வாங்கி ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன் மற்றும் சுத்தமான வேப்ப எண்ணெய் 4 ஸ்பூன் தலைமுடிக்கு ஏற்ப இந்த இரண்டு எண்ணெகளை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதனை பெண்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இல்லை ஆண்கள் கூட பயன்படுத்தலாம்....
அதன் பின்னர் இந்த எண்ணெய் எடுத்து விரல்களில் தொட்டு தொட்டு உங்களுடைய தலைமுடியின் வேர் கால்களில் படும் படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
(வெறும் வேப்ப எண்ணெயை மட்டுமே தலைக்கு தேய்க்க கூடாது நண்பர்களே...
தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து மட்டுமே தேய்க்க வேண்டும்.நினைவில் இருக்கட்டும் நண்பர்களே...)
இந்த எண்ணெயை தலை முடியின் கீழ் பகுதி வரையில் கூட தடவினாலும் நல்ல பலனை தரும்.
அப்படி இல்லை வேப்ப எண்ணெய் வாசனை பிடிக்காது விருப்பம் இல்லை என்பவர்கள் முடியின் வேர் பகுதியில் மட்டும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள் போதும்.....
இப்படி தேய்த்து விட்டு இரவு முழுவதும் ஊற விடுங்கள் வாசனை தாங்க முடியாது எனில் பகலில் தேய்த்து 5,6 மணி நேரம் ஊற விட்டு தலைக்கு நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு தேய்த்து குளித்து விடுங்கள் நண்பர்களே.....
கொஞ்சம் நிறையவே ஷாம்பு போட்டு இரண்டு மற்றும் மூன்று முறையாக ஷாம்பு தேய்த்து குளித்து விடுங்கள் வேப்ப எண்ணெய் வாசனை போகும் வரை நன்றாக தேய்த்து குளித்து விடுங்கள் வேப்ப எண்ணெயின் வாசனை போய்விடும் நண்பர்களே....
இப்படி வேப்ப எண்ணெய் தலைக்கு தேய்த்து குளிப்பதால் என்ன பயன் இருக்கும்?
என்று எண்ண வேண்டாம்.......
வேப்ப எண்ணெய் தடவினால் ஒவ்வொரு முடியின் தடிமனையும் அதிகரிக்க செய்யக் கூடிய சக்தி இந்த எண்ணெய்க்கு உள்ளது.
சிலருக்கு முடி இரண்டாக சட்டென்று உடையும்
இதனை சரிசெய்யவும் தலை முடி நன்றாக அடர்த்தியாக ஸ்ட்ராங்காக வளரவும் இந்த வேப்ப எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும்.....
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை வேப்ப எண்ணெய் தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்....
இவ்வாறு செய்வதால் பொடுகு, பேன்,தலைமுடி உதிர்தல், முடி அடர்த்தி குறைவு, மெலிந்த தலைமுடி, வலுவிழந்த தலைமுடி ஆகிய அனைத்து விதமான தலை முடி பிரச்சினை தீர்வாக அமையும்.....
வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்து வந்தால் முடி அடர்த்தியாகவும் , வலுவாகவும் மாறும்.... இதனை தொடர்ந்து தடவி வந்தால் முடி பிரச்சினை தீரும்.....
வாழ்க வளமுடன்......