நாம் தினமும் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் பூச்சிகள் வராமல் இருக்க சில டிப்ஸ் இதோ.......
பயிறு மற்றும் தானிய வகைகளில் சீக்கிரம் வண்டுகள், பூச்சிகள் வந்து விடும். அப்படி பூச்சிகள் வராமல் இருக்க நாம் பயன்படுத்தும் ஜாடியில் ஒரு துண்டு மஞ்சள் அல்லது பூண்டையோ அல்லது வசம்பு துண்டு போட்டு வைத்தால் போதும் வண்டுகள் வராமல் இருக்கும்......
இனிப்பு வகைகள் நாம் எங்கு ஒளித்து வைத்தால் கூட வண்டுகள் எறும்புகள் மற்றும் பூச்சிகள் அசால்ட்டாக இனிப்பை தேடி வந்து சேர்ந்து விடும். இதனை தடுக்க இனிப்பு வகைகள் வைக்கும் போது அதில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் வண்டுகள் ஒட்டிக் கூட பார்க்காது....
நாம் அடிக்கடி வாங்கும் காய்கறிகள் சிறிதளவு வினிகர் கலந்த தண்ணீரில் 10 போட்டு வைத்தால் போதும் தண்ணீர் வடித்து விட்டு உபயோகித்து வந்தால் பூச்சிகள் அழிந்து விடும்......
பருப்பு வகைகளில் பெருங்காயம் தட்டி போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.....
அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றை போட்டு வைத்தால் போதும் வண்டுகள் வராது....
உளுத்தம்பருப்பு வாங்கி வந்தும் அதனை புறம் வைத்து புடைத்து விட்டால் அதிலிருந்து மாவு போல் கீழே விழுந்து விடும்.
அதன் பின்னர் டப்பாவில் உளுத்தம்பருப்பு போட்டு வைத்தால் வண்டுகள் ஒட்டிக் கூட பார்க்க முடியாது.....
துவரம்பருப்பு மற்றும் உளுந்தில் சிறிதளவு வசம்பு சேர்த்து மூடி விட்டால் பூச்சிகள் வராது....
மிளகாய் பொடியில் வண்டுகள் வராமலும் இருக்க ஒரு சிறிய துணியில் சிறிதளவு பெருங்காயம் துண்டு வைத்து துணியை மூட்டை போல் கட்டி மிளகாய் தூள் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் தடுக்க முடியும். ...
பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்பு சேர்த்து நிழலில் உலர்த்தி பின்னர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் தடுக்கும்......
மைதா, ரவை இவற்றில் வண்டுகள் வராமல் தடுக்க கல் உப்பு துணியில் கட்டி டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் ஒரு போதும் வராது.....
இல்லையென்றால் காய்ந்த வேப்பிலை மற்றும் சுக்கு பொடியும் தூவினால் பூச்சிகள் வராது....
தனியா வாங்கி வந்தால் அத்துடன் 4,5 அடுப்பு கரித்துண்டுகளை போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் தடுக்கலாம்....
கோதுமை உள்ள டப்பாவில் ஒரு கொத்து வெந்தய கீரை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு வண்டுகள் வராமல் இருக்கும்....
புளியை வாங்கி வந்ததும் அதில் இருக்கும் கொட்டைகள் மற்றும் நார்கள் அனைத்தும் எடுத்து விட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிதளவு கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேலாக வண்டுகள் வராமல் தடுக்க முடியும்.....
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகிய பழங்களின் தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வருவதை தடுக்கலாம்......
எள் டப்பாவில் சிறிதளவு நெல் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது...
பூண்டில் புழுக்கள் வராமல் தடுக்க சிறிதளவு கேழ்வரகு துணிமூட்டை தயார் செய்து பூண்டு டப்பாவில் போட்டு வைத்தால் புழுக்கள் வராமல் இருக்கும்......
நீண்ட நாட்களுக்கு பூண்டு கெடாமல் இருக்கும்......
சமையல் அறையில் உள்ள அலமாரியில் காய்ந்த வேப்பிலை சிலவற்றை போட்டு வைத்தால் அலமாரியில் உள்ள டப்பாவில் பூச்சிகள் ஏறாமல் தடுக்க முடியும்......
சமையல் அறையில் உள்ள கிருமிகள் மற்றும் பூச்சிகள் அழிக்க சில டிப்ஸ் இதோ.......
சமையல் அறையில் தான் ஏராளமான பூச்சிகள் மற்றும் பாக்டீரியா தாக்குதல் அதிக அளவில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. அதில் சில கண்ணுக்கு தெரியும் பல தெரிவதில்லை.
அவ்வாறு மறைந்த இருக்கும் பூச்சிகள் நுண்ணுயிரிகள் சமையல் அறையில் உள்ள காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் , உணவு வகைகள் மற்றும் பாத்திரத்தில் மீது எளிதில் பரவும் தன்மை கொண்டது....
அதனால் நம் உடலில் பல செரிமான மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய் வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும்....
எனவே நோயிலிருந்து நம்மை பாதுகாக்க எந்த ஒரு வேலையை செய்தாலும் நாம் உணவு உட்கொள்வதற்கும் முன்பும் பின்பும் அவ்வப்போது கைகளில் கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு நன்கு கைகளை கழுவுதல் வேண்டும். .. ..
சுத்தமான குடிநீரில் சமையல் செய்ய வேண்டும். குறிப்பாக மழை பெய்யும் காலங்களில் கிணற்று நீர் மற்றும் மழை நீர் ஆகியவற்றில் சமையல் செய்ய கூடாது.
இல்லை என்றால் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து விட்டு சமையல் செய்ய உபயோகிக்கலாம்..... ..
பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச்களில் கிருமி அதிக அளவில் இருக்கும் அபாயம் உள்ளது.
எனவே சிங்க்கை கழுவும் ஸ்பாஞ்ச்களில் கிருமி இருக்கும் இதையே பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச்களாக பயன்படுத்த கூடாது.
தனித்தனியாக ஸ்பாஞ்ச்களாக உபயோகம் செய்வது நல்லது....
இறைச்சிகளை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவதால் அதில் இருக்கும் நுண்ணுயிரிகள் குளிர் சாதனப் பெட்டியில் ஏதாவது ஒரு இடத்தில் எப்போதும் படிந்து விடும்....
மேலும் இறைச்சி நறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவை சுத்தம் செய்யாமல் அலமாரியில் மற்ற பொருட்களோடு வைக்க கூடாது..
ஏனெனில் அதில் இருக்கும் கிருமிகள் அலமாரியில் உள்ள பொருட்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.....
கரப்பான், பூச்சிகள் மற்றும் புழுக்கள் இவையனைத்தும் இருட்டான இடத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே வாரத்திற்கு ஒரு முறை வெந்நீர் ஊற்றி பைப்களை கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதால் நுண்ணுயிரிகள் கிருமி வெளி வர முடியாது.....
பொதுவாக நாம் ஆடைகளை மட்டுமே நாம் துவைப்பது உண்டு. கிச்சன் பயன்படுத்தும் துணிகளை மறந்து அப்படியே விட்டு விடுவோம். அந்த துணிகளை அப்படியே உபயோகம் செய்வது தவறான ஒன்றாகும்....
எனவே அடிக்கடி கிச்சன் பயன்படுத்தும் துணிகளை தினமும் துவைப்பது நல்லது.......
இவ்வாறு சுத்தம் செய்து வந்தால் நம்மை அறியாமல் பரவும் கிருமிகளை சமையல் அறை சுத்தம் செய்வதன் மூலம் நாம் ஆரோக்கியம் வாழும் வாழ முடியும்....
இந்த டிப்ஸ்கள் எல்லாம் டிரைப்பன்னுங்க.....
வாழ்க வளமுடன்.............