குளிருக்கு இதமான மட்டன் சூப் வகைகள்.... இந்த வகையில் சூப் செய்து பாருங்கள் செய்முறை இதோ........
மட்டன் சூப்பினை அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும் சக்தி மட்டன் சூப்பினை குடிப்பதால் நமக்கு கிடைக்கிறது...
அசைவ பிரியர்களுக்கு கட்டாயமாக மட்டன் சூப்
பிடிக்கும். மட்டனில் எலும்பு சூப் மற்றும் ஆட்டுக்கால் சூப் என வகைகள் உள்ளன எந்த விதமாக சூப் இருந்தாலும் மட்டன் என்றால் தனி ருசி தான்.....
வாங்க நண்பர்களே இப்போது மட்டன் வைத்து சுலபமாக சமையல் தெரியாதவர்கள் கூட ஈஸியா சமைக்கும் இரண்டு முறையில் சூப் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்......
1. ஆட்டுக்கால் சூப்:
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் :4
மிளகு: 3 ஸ்பூன்
தனியா: 2 ஸ்பூன்
சீரகம்: 2 ஸ்பூன்
பூண்டு பல்: 6 பல்
மஞ்சள்தூள் :2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்: 1 கப்
தக்காளி: 3
நல்லெண்ணெய்: தாளிக்க
உப்பு: தேவையான அளவு
கொத்தமல்லி: சிறிதளவு
கறிவேப்பிலை: சிறிதளவு
செய்முறை விளக்கம்:
ஆட்டுக்கால் வாங்கி வந்து அதனை துண்டு துண்டாக நறுக்கி நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம் சிலவற்றை எடுத்து நறுக்கி தனியாக வைக்கவும்.
அதில் கொஞ்சம் விழுது அரைக்க தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுப்பு கடாயை வைத்து எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம் ,தனியா, பூண்டு மற்றும் வெங்காயம் சிறிதளவு சேர்த்து வதக்கவும் பின்னர் அதனை ஆறியதும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
குக்கரில் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்கால் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி ( ஆட்டுக்கால் மூழ்கும் வரை) கொள்ளவும். உப்பு சேர்க்க வேண்டாம். அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள்தூள் சேர்த்து மூடி 2 விசில் வைத்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அனைத்து விடவும்.
ஆவி அடங்கியதும் திறக்கவும். இப்போது உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும்.
வதங்கியதும் சூப்பில் சேர்த்து மிளகு தூள் கொஞ்சம் கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
சுடச்சுட காரசாரமான உடலுக்கு ஆரோக்கியமான ஆட்டுக்கால் சூப் தயார்...
இதனை அப்டியே ஒரு பவுளில் போட்டு சுடச்சுட பரிமாறலாம்.....
2. மட்டன் எலும்பு சூப்:
தேவையான பொருட்கள்:
மட்டன் எலும்பு: கால் கிலோ
வெங்காயம் :2
தக்காளி: 1
மஞ்சள் தூள்:1 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
மிளகு தூள்:1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது :2 ஸ்பூன்
பட்டை கிராம்பு ஏலக்காய்: தலா 2
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை: தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
ஆட்டு எலும்பு நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொண்டு குக்கரில் போட்டு
தேவையான அளவு தண்ணீர் 1 லி ஊற்றி அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள்,சீரகம், மிளகு தூள், சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிதளவு கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் .
வதங்கியதும் கொதிக்கும் மட்டனில் போட்டு நன்றாக கலந்து விடவும் கடைசியாக காரத்திற்கு ஏற்ப மிளகு தூள் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
சுடச்சுட காரசாரமான உடலுக்கு நன்மை தரும் மட்டன் எலும்பு சூப் தயார்......
இது போலவே நீங்களும் எளிய முறையில் சீக்கிரம் சமைக்க கூடிய வகையில் ஆட்டுக்கால் சூப் மற்றும் மட்டன் எலும்பு சூப்.. தயார் செய்து சாப்பிட்டு பாருங்கள்.......
வாழ்க வளமுடன்.......