சாம்பல் பூசணிக்காய் வைத்து இவ்வாறு சமைத்து சாப்பிடுங்கள் நண்பர்களே.....
எளிதாக நம் வீட்டில் செய்யக் கூடிய உணவு வகைகள் :
சாம்பல் பூசணி பரங்கிக்காய் தோற்றத்தில் ஆனால் சாம்பல் நிறத்தில் இருக்கும் . இதனால் இதற்கு சாம்பல் பூசணி என்று பெயர்.
கோடைகாலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது. இதனால் கோடைப் பூசணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது.
சாம்பல் பூசணிக்காய் 96% நீர் சத்து அதிகம் உள்ளது இது உடல் எடை குறைய அதிகம் உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் ஆரோக்கியம் நிலை நிறுத்தும் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்துமா, சிறுநீரக கற்கள் பாதிப்பை சரிசெய்யும் அருமருந்தாக உதவுகிறது.....
சரி வாங்க நண்பர்களே சாம்பல் பூசணிக்காய் வைத்து எப்படி?,என்ன ?சமைத்து சாப்பிடுவது என்று பார்க்கலாம் வாருங்கள்......
1. சாம்பல் பூசணிக்காய் பருப்பு சாம்பார் ..
தேவையான பொருட்கள்:
சாம்பல் பூசணிக்காய் : 1 கப் நறுக்கியது
பெரிய வெங்காயம்:2
தக்காளி:2
கறிவேப்பிலை :1 கொத்து
பச்சை மிளகாய்: 1
மிளகாய் வற்றல்: 3
துவரம் பருப்பு : 2 கப்
மஞ்சள்தூள்:1 ஸ்பூன்
மிளகாய் தூள்:2 ஸ்பூன்
தேங்காய் துருவல் : கால் கப்
சீரகம்:2 ஸ்பூன்
பூண்டு:5 பல்
எண்ணெய் : தாளிக்க
கடுகு:1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு:1 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
புளி கரைசல் அல்லது எலுமிச்சை சாறு: சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து அதில் பருப்பு சேர்த்து அதிக பூண்டு,சீரகம் மற்றும் மஞ்சள்தூள் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி குக்கர் மூடி 4 விசில் வைத்து இறக்க வேண்டும்.
பூசணிக்காய் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்... மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் கீறி சேர்க்க வேண்டும்.தேங்காய் துருவல் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் சேர்த்து வெடித்துப் பின்னர் உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பின்னர் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பூசணிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சிறிதளவு சேர்த்து5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான பூசணிக்காய் சாம்பார் தயார்... நீங்களும் இது போன்ற முறையில் செய்து சாப்பிடுங்கள்....
2. சாம்பல் பூசணி ஜுஸ்:
தேவையான பொருட்கள்:
சாம்பல் பூசணி துருவல்: 1 கப்
வெள்ளரிக்காய் துருவல்:1 கப்
கேரட் துருவல்: 1கப்
நெல்லிக்காய் துருவலதுருவல்:கால் கப்
புதினா:1 கொத்து
தயிர்:3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு:1 ஸ்பூன்
மிளகு தூள்:1 ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
சாம்பல் பூசணி, வெள்ளரிக்காய், கேரட், நெல்லிக்காய் மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ள வேண்டும்.
இத்துடன் புளிப்பு சுவைக்காக தயார் அல்லது எலுமிச்சை சாறு உப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
பூசணி ஜுஸ் தயார்.....
3. சாம்பல் பூசணி வடை:
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் துருவல் : 1 கப்
உளுத்தம்பருப்பு: 2 கப்
வெங்காயம்:2 நறுக்கியது
அரிசி மாவு: 2 ஸ்பூன்
கறிவேப்பிலை: 1 கைபிடி
கொத்தமல்லி தழை: 1 கைபிடி
உப்பு: தேவையான அளவு
சீரகம்: 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்:1 ஸ்பூன்
பச்சை மிளகாய்: 2
எண்ணெய்: பொரிப்பதற்கான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் உளுத்தம்பருப்பு 4 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் பஞ்சுஅரைத்து கொள்ளவும்.
பிறகு சாம்பல் பூசணிக்காய் துருவல் அதில் சேர்க்கவும். அரைக்க தேவை இல்லை. .
பின்னர் மாவில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை பக்குவத்தில் பொட வேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை எடுத்து வடை அளவில் தட்டி எண்ணெயில் போட்டு வேண்டும்..
அவ்வளவு தான் சூப்பரான சாம்பல் பூசணி வடை தயார்.....
இவ்வளவு அருமையான ருசி தரும் பூசணிக்காய் வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் உடலில் தேவையான அளவு நீர் சத்து அதிகம் ஆகும்....
வாழ்க வளமுடன்.......