பிரிந்தவர்கள் எவராயினும் ஒன்று சேர நீங்கள் நினைத்தால் உடனே இந்த பரிகாரம் செய்யுங்கள்....
பிரிந்து சென்ற கணவன் மற்றும் மனைவி யாராக இருந்தாலும் அவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அளவு அட்சதைக்கு உண்டு....
இணை பிரியா தம்பதிகளாக வருடங்கள் பல ஓட ஒன்று சேர்ந்து வாழ்ந்த பலபேர் தற்போதைய காலத்தில் ஒத்துவராது இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலையில் பார்த்திருப்பீர்கள்....
அப்படி பிரிந்தவர்கள் ஒருவரின் மனதில் ஏன் பிரிந்தோம்....?
மீண்டும் அவர்களுடன் சேர்ந்து வாழமாட்டோமா...? அவர்களுடன் மகிழ்ச்சியாக மறுபடியும் சேர்ந்து இருக்க முடியாது..? சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்குமே....என்று ஏக்கத்துடனும்.... இருப்பார்கள்....
மற்றொருவர் மனதிலோ அவர்களை திரும்ப சந்திக்க கூடாது...அவர்களுடன் சேரவே கூடாது என்ற எண்ணத்தில் நிலைத்து நிற்பார்கள்... இப்படி இருப்பவர்களையும் மாற்றக் கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு....
இப்படி பட்ட சூழ்நிலை யாருக்கும் வரக் கூடாது.. ஏனெனில் அவர்கள் பிரிந்து வாழும் வாழ்க்கை அவர்களை மட்டும் பாதிக்காது அவர்களின் பிள்ளைகள், பெற்றோர்கள்,உற்றார் உறவினர்கள் என அனைவரையும் மனசங்கடத்தில் ஆழ்த்தும்.....
அப்படி நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையை விட்டு பிரிந்து வாழும் சூழலில் இருந்தால் அவர்களுடன் மீண்டும் அதே பாசத்துடனும் நேசத்துடனும் அன்பு பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் அது மிகவும் நல்லது....
இதோ உங்களுக்கான பரிகாரம் இதை தவறாமல் செய்யுங்கள்.... அந்த எம்பெருமான் சிவ பெருமான் மீது பாரத்தை போட்டுவிட்டு இந்த பரிகாரம் செய்து பாருங்கள்....
நீங்கள் நிச்சயமாக ஈசனின் ஆசீர்வாதத்துடன் உங்கள் துணையுடன் இணைந்து என்றும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்....
சரி வாங்க நண்பர்களே ஈசனின் துணையோடு பிரகாரத்தை என்னவென்று பார்க்கலாம்.....
நாம் செய்யவிருக்கும் பரி காரத்திற்கு தேவையான பொருட்கள் நிறைய தேவை இல்லை... அட்சதை ஒன்று போதும்.....
அட்சதை என்பது எல்லோருக்கும் தெரியும்... பச்சரிசியில் கொஞ்சமாக மஞ்சள் தூளை சேர்த்து நெய் அல்லது தண்ணீர் சேர்த்து பிசைந்து அதாவது நன்கு கலந்து விட வேண்டும் அவ்வளவு தான் அட்சதை தயார்......
இவ்வாறு அட்சதை தயார் செய்து கொள்ள வேண்டும் நண்பர்களே....
பின்னர் உங்கள் வாழ்க்கை துணையின் புகைப்படம் இருந்தால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். (நீங்கள் கணவராக இருந்தால் உங்கள் மனைவியின் புகைப்படம் மற்றும் நீங்கள் மனைவியாக இருந்தால் உங்கள் கணவரின் புகைப்படம் )
அப்படி புகைப்படம் ஏதும் இல்லை என்றால் கவலைப்படாமல் ஒரு வெள்ளை காகிதத்தில் அவர்களின் பெயர் எழுதி வைத்து கொள்ளுங்கள் நண்பர்களே....
இதுவே போதுமானதாக இருக்கும். நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பூசை அறையில் மட்டுமே செய்ய வேண்டும்.
பூஜை அறை இல்லை அலமாரியில் வைத்து உள்ளோம் என்றால் பரவாயில்லை... தரையை சுத்தம் செய்து விட்டு அலமாரியின் கீழ் அமர்ந்து கொள்ளலாம் நண்பர்களே....
பூஜை அறையில் அமர்ந்து கொண்டு அவரவர் குலதெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு தயார் செய்து வைத்திருக்கும் அட்சதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
கிண்ணத்தின் அருகில் வாழ்க்கை துணையின் புகைப்படம் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை மனதில் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
அது என்னவென்றால் " கணவன் மனைவி வேறு வேறு அல்ல.... இருவரும் ஒருவரே என்றும்... கணவனில் பாதி தான் மனைவி.... மனைவியில் பாதி தான் கணவன்.... என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்....
என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த அவதாரமான அர்த்தநாரீஸ்வரரை மனதில் மனதார நினைத்து கொண்டு இந்த பரிகாரம் செய்ய தொடங்கலாம்....
முதலில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்.....
கிண்ணத்தில் இருக்கும் அட்சதையில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து உங்களின் வாழ்க்கை துணையின் புகைப்படம் மீது போட வேண்டும்.
இப்படி போடும் போது " ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி!! " என சொல்லி முடிக்க வேண்டும். இப்படி 11 முறை கண்டிப்பாக சொல்லி முடிக்க வேண்டும்...
அதற்கு மேல் எங்களால் சொல்ல முடியும் என எண்ணுபவர்கள் ஒற்றை படையில் முடியும் படி பரிகாரம் செய்து முடிக்க வேண்டும்.....
எத்தனை மற்றும் சொல்லி முடிக்கும் போதும் மறக்காமல் அட்சதை எடுத்து உங்கள் வாழ்க்கை துணையின் புகைப்படம் மீது போட வேண்டும்... மறக்காதீர்கள்......
இப்படி 48 நாட்கள் நீங்கள் செய்ய வேண்டும் அப்படி செய்யும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையின் மீது வைத்திருக்கும் அன்பு உண்மை அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பும் எண்ணம் கண்டிப்பாக வாய்ப்புகள் உங்களை தேடி வரும்...
நம்பிக்கையுடன் இந்த பரிகாரம் செய்து வந்தால் நிச்சயமாக பலன் அளிக்கும் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற அனுமதிக்காமல் இருங்கள்.
எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் தோன்றச் செய்யுங்கள் நண்பர்களே.... நிச்சயம் நிறைவேறும்...
சர பரிகாரம் செய்து முடித்துவிட்டு அட்சதை என்ன செய்ய வேண்டும்..? என்று யோசனை வருகிறது....
பரிகாரம் முடித்து விட்டு ஓடும் தண்ணீரில் போடுவது சிறந்தது....
அப்படி இல்லை என்றால் வீட்டில் அல்லது வீட்டின் அருகே கிணறு இருந்தால் அதில் போட்டு விடுங்கள் ....
அப்படியும் கிணறு இல்லை என்றால் அட்சதை ஒரு பையில் போட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள் நண்பர்களே....
வீட்டில் நுழையும் முன் கால்களை கழுவி விட்டு உள்ளே செல்லுங்கள் நண்பர்களே....
இப்படி பரிகாரம் செய்து வந்தால் அந்த ஈசனின் திருவருளால் நீங்கள் நினைப்பது போல உங்கள் வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்....
வாழ்க... வளமுடன்......