காரசாரமான நண்டு கிரேவி!!
இன்றைய தலைமுறையினருக்கு நாம் கொடுக்க வேண்டியது ஆரோக்கியமான உணவு மட்டுமே!!
நண்டு இறைச்சி பிடிக்காதவர்கள் யாருமில்லை! நண்டு வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
உடல் பருமன் உள்ளவர்களின் கடல் உணவு தேர்வில் நண்டு சிறந்த தேர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடை குறையுவும் உதவுகிறது.
வைட்டமின் ஏ சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும் வழி செய்கிறது. கண் புரை மற்றும் கருவிழி சிதைவு தடுக்கும் சக்தி வாய்ந்த ஆற்றல் உடையது நண்டு!
வாரம் ஒரு முறையேனும் நண்டு சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கும் சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும்.
நண்டு கிரேவி செய்ய
தேவையான பொருட்கள்:
- நண்டு: 1/2 கி
- பெரிய வெங்காயம்: 2
- தக்காளி: 2
- இஞ்சி பூண்டு விழுது: 4 ஸ்பூன்
- எண்ணெய் தாளிக்க
- உப்பு தேவையான அளவு
- சீரகம்: 1 ஸ்பூன்
- சோம்பு: 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்: 1 ஸ்பூன்
- தனியா தூள்: 2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்: 2 ஸ்பூன்
- மிளகு தூள் : 1 ஸ்பூன்
- தேங்காய் அரவை: கால் கப்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தேவையான அளவு
செய்முறை விளக்கம்: முதலில் நண்டினை தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்
நண்டு சீக்கிரம் வெந்து விடும்.
10 நிமிடங்கள் போதுமான நேரம்.
வெந்தவுடன் தனியாக நண்டினை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேங்காய் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய அடிகனமான பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு சேர்த்து
பொறிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்து உள்ள தக்காளி சேர்த்து கலந்து நன்றாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.
எடுத்து வைத்து உள்ள மஞ்சள்தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
நன்றாக மசாலா பொருட்கள் வாசம் வரும் வரை வதக்கவும்.
இப்போது வேகவைத்த நண்டினை சேர்த்து கலந்து விடவும்.
தேங்காய் அரவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
5 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாயை மூடி போட்டு மூடவும்
5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் தண்ணீர் வற்றி இருக்கும்.
எடுத்து வைத்துள்ள மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
கமகமக்கும் நண்டு கிரேவி ரெடி!
கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்
சுவையான நண்டு கிரேவி தயார்
இது போலவே செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துங்கள்!!
வாழ்த்துக்கள்
நண்பர்களே! நன்றி!!