கமகமக்கும் மட்டன் மசாலா கிரேவி!!
தேவையான பொருட்கள்:
- மட்டன்: 1/2கி
- தேங்காய்: கால் கப்
- கசகசா: 1 ஸ்பூன்
- வெங்காயம்: 3
- தக்காளி: 3
- இஞ்சி பூண்டு விழுது: கால் கப்
- மஞ்சள்தூள்: 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
- தனியா தூள்: 2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்: 2 ஸ்பூன்
- உப்பு: தேவையான அளவு
- எண்ணெய்: தாளிக்க தேவையான
- பட்டை, கிராம்பு ,ஏலக்காய்: தலா 2 nos
செய்முறை விளக்கம்:
முதலில் மட்டன் நன்கு அலசி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பின்னர் தேங்காய் துருவல் மற்றும் கசகசா சேர்த்து விழுது பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து தாளிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள்,
சேர்த்து நன்றாக கிளறவும் தேவையான அளவு மிளகாய் தூள், காரத்திற்கு ஏற்ப சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும் கூடவே தேங்காய் விழுது சேர்த்து கலந்து விடவும்.
மட்டன் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.
பதம் பார்த்து விட்டு குக்கரை முடி விடவும். 5-6 விசில் விட்டு இறக்கி விடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு எண்ணெய் மேலே மிதந்துபார்க்கும் போது
அப்படியே!அல்லி!!
சாப்பிட தோன்றும்
அருமையான மட்டன் மசாலா கிரேவி கமகமக்கும் சுவையோடு தயார்!
ஒரு பானை சோறு காலியாகிவிடும்!
இது போல நீங்களும் வீட்டில்செய்து இல்லத்தார் அனைவரையும் அசத்துங்கள்! நண்பர்களே!
வாழ்த்துக்கள்!!
நன்றி!!