அசத்தலான சைடிஷ் உருளைக்கிழங்கு மசாலா!
இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!
வாங்க பார்க்கலாம்!
- சப்பாத்தி பூரிக்கு ஏற்ற அசத்தலான சைடிஷ் ரெடி! ஹோட்டல் சுவையை விட அருமையான சுவையில்!
வீட்டில் என்ன தான் பார்த்து பார்த்து சுவையாக செய்து கொடுத்தாலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஹோட்டல் சுவை பிடித்தமானதாக இருக்கும்.
ஹோட்டல் ருசியை விரும்பி உண்ணும் குழந்தைகள் வீட்டில் செய்யும் உணவு வகைகள் அவ்வளவு விரும்பி உண்ணுவதில்லை!
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு கொடுக்க கொழுகொழுவென இருப்பார்கள்!!
- ஹோட்டல் சுவையில் சப்பாத்தி பூரிக்கு ஏற்ற அசத்தலான
சைடிஷ் உருளைக்கிழங்கு அசத்தலான
- எப்படி செய்வது பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே!
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு: 1/2 கி
- பெரிய வெங்காயம்: 2
- தக்காளி: 3
- பூண்டு: 10
- இஞ்சி சிறிய துண்டு
- சோம்பு: 1 ஸ்பூன்
- சீரகம் : 1 ஸ்பூன்
- கிராம்பு: 3
- ஏலக்காய்: 2
- பட்டை: 2
- மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
- தனியா தூள்: 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்: 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா: 1 ஸ்பூன்
- உப்பு: தேவையான அளவு
- சர்க்கரை: 1 சிட்டிகை
- எண்ணெய்:தாளிக்க தேவையான அளவு
- நெய்: 1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை: தேவையான அளவு
செய்முறை விளக்கம்: முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- பின்னர் உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்வேண்டும்..
- மிக்சியில் நறுக்கிய வெங்காயம், பூண்டு ,இஞ்சி இவை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
- அதே பேஸ்ட்டுடன் தக்காளி சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும் .
- மசாலா ரெடி!
- அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து தாளிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் சிறிது நெய் சேர்த்து
- சீரகம் ,சோம்பு ,பட்டை, கிராம்பு இவற்றை சேர்த்து கொள்ளவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து கலந்து கொள்ளவும். நன்றாக கிளறி விடவும்.
- பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கலந்து விடவும்.
- நன்றாக வதக்கவும் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
- 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் .
- குக்கரை மூடி 4 விசில் வைத்து இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து கிளறவும் ஹோட்டல் சுவையில் அசத்தலான
- சப்பாத்தி பூரிக்கு ஏற்ற செம்ம டேஸ்ட் ருசியான
- சைடிஷ் உருளைக்கிழங்கு மசாலா ரெடி!
- நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள்!