சுவைமிக்க செட்டி நாட்டு சிக்கன் சால்னா!! பலரும் விரும்பி உண்ணும் அசைவ உணவு வகையில் ஒன்று தான் சிக்கன்.
இந்த சிக்கனை பலவகையாக சமைத்து சாப்பிடுவோம். அதில் ஒன்று தான் சிக்கன் சால்னா!!
இதனை சீக்கிரம் செய்து முடித்திடலாம் . வாருங்கள் சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம்!!
தேவையான பொருட்கள்:
- சிக்கன் எலும்பு இல்லாதது : 1/2 கி
- வெங்காயம்
- தக்காளி
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி தழை
- புதினா
- கிராம்பு ஏலக்காய்
- பிரிஞ்சி இலை
- சோம்பு
- பட்டை
- பச்சை மிளகாய்
- இஞ்சி பூண்டு விழுது
- மஞ்சள்தூள்
- மிளகாய் தூள்
- கரம் மசாலா தூள்
- தனியா தூள்
- எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தாளிக்க தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
வறுத்து அரைக்க:
1 ஸ்பூன் எண்ணெயில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் மிளகு தேங்காய் கசகசா
முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக்கி பின் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
பிறகு சிக்கனில் உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து 10நிமிடங்கள் ஊற வைத்து விடவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்க்கவும்.
பொறிந்ததும் வெங்காயம் புதினா சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து விடவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய் தூள் தனியா தூள் கரம் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் கூடவே சிக்கனையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு பார்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு கொதிக்க விடவும்.
இப்போது விருப்பம் உள்ளவர்கள் முந்திரி அரைத்து சேர்த்து கொள்ளவும்
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பரோட்டா சப்பாத்தி பூரிக்கு இட்லி இடியாப்பம் தோசையுடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.
சிக்கன் சால்னா தயார்!!
நீங்களும் இது போல வீட்டில் செய்து பாருங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்அசத்துங்கள்! வாழ்த்துக்கள்!!நண்பர்களே!!நன்றி!!