சுவையான பால் பாயாசம் பாரம்பரிய முறையில் குறைந்த நேரத்தில் செய்வது எப்படி தெரியுமா?
சேமியா ஜவ்வரிசி இரண்டும் சேர்த்து செய்யும் பால் பாயாசம் பாரம்பரிய முறையில் இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.
வீட்டில் உள்ள அனைவரும் பால் பாயாச பிரியர்களாக கண்டிப்பாக இருப்பார்கள்!
விசேஷ நாட்களில் நமக்கு முதலில் தேர்வாக இருப்பது
இந்த பால் பாயாசம் தான்!
பிறந்த நாள், திருமண நாள், விசேஷ நாட்களில் நமது அம்மா நமக்கு செய்து தரும் முதல் இனிப்பு இந்த பால் பாயாசம் தான்!
பின்னர் அனைவரின் ஆசிர்வாதம் பெறுவோம் .
இந்த வழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது.
பால் பாயாசம் நடுத்தர வர்க்கத்தின் இனிப்பு வகைகள் ஒன்றாகும்.
இந்த பால் பாயாசத்தை சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்!
பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
- சேமியா: 100கி
- ஜவ்வரிசி: 100கி
- சர்க்கரை: 250கி
- காய்ச்சி ஆறவைத்த பால்: 300ml
- தண்ணீர்: 500ml
- முந்திரி ,திராட்சை 20
- ,ஏலக்காய்த்தூள் சிறிதளவு
- உப்பு ஒரு சிட்டிகை
- பசு நெய்: 3 ஸ்பூன்
பால் பாயாசம் செய்யும் முறை:
- முதலில் அடுப்பை பற்ற வைத்து விட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய வைக்க வேண்டும் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் ஜவ்வரிசி போட்டு லேசான தீயில் வறுத்து எடுக்க வேண்டும்.
- முக்கியமாக கருக கூடாது ஜவ்வரிசி பட்டென்று பொரிந்து வரும் பொரிந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.
- தண்ணீர் கொதித்தவுடன் வறுத்தெடுத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
- வேறொரு பாத்திரத்தில்
- சிறிதளவு நெய் சேர்த்து எடுத்து வைத்து உள்ள முந்திரி திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- அதே நெய்யில் சேமியாவையும் சேர்த்து வறுத்து அதனை ஜவ்வரிசியில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஒரு சிட்டிகை மட்டுமே உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- ஜவ்வரிசி சேமியா இரண்டும் வெந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
- தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
- வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை இரண்டையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.
- காய்ச்சி ஆறிய பாலை இப்போது சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்
- பால் சூடாக இருக்கும் நிலையில் கண்டிப்பாக திரிந்து விடும். எனவே ஆற வைத்து சேர்த்து கொள்ளவும்.
- ஒன்று பாயாசம் ஆறி இருக்க வேண்டும்.
- அல்லது பால் ஆறி இருக்க வேண்டும்.
- இவ்வாறு செய்வதால் சுவையான பால் பாயாசம் பாரம்பரிய முறையில் தயார்!
- பத்தே நிமிடங்களில் பட்டென்று செய்ய கூடிய வகையில் பாரம்பரிய இனிப்பினை நீங்களும் செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அசத்துங்கள்!
நன்றி!