வீட்டில் தினமும் விளக்கேற்றி இறை வழிபாடு செய்யும் பட்சத்தில் வீடு சுபிட்சம் பெறும்.
ஆனால் சில வீடுகளில் விளக்கைக் கூட தினமும் ஏற்ற முடியாத சூழல் இருக்கும் .
இந்நிலையில் துர்தேவதைகளின் நடமாட்டம் மற்றும் செய்வினை கோளாறு ஏவல் பில்லி சூனியம் என்று பல பிரச்சினைகள்
சூழ்ந்து இறைவழிபாடு செய்ய
முடியாதவர்கள் இந்த பரிகாரம் செய்து பலன் பெறலாம்!!
வீட்டில் கண் திருஷ்டி உள்ளது நல்ல காரியங்கள் எதுவுமே நடக்கவில்லை! என்று சொல்பவர்கள்!
வீட்டில் எப்போதுமே பணக் கஷ்டம் இருக்கிறது என்பவர்கள்என்பவர்கள்!
மன நிம்மதி என்பதே இருப்பது கிடையாது! என்று சொல்பவர்கள்!
கடன் தொல்லை இருக்கிறது என்பவர்கள்! ஆகிய அனைத்து பிரச்சினைகள் இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள்!
இந்த பரிகாரம் செய்து பலன் பெறலாம்!!
வாழ்வில் முன்னேறலாம்!!
ஆனந்தமாய் வாழலாம்!!
இவையெல்லாம் போக்கும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் மட்டுமே!
அது ஒரு மாலை மட்டுமே!
அனைவரின் வீட்டில் இருக்க வேண்டிய மாலை இது !
வாங்க பார்க்கலாம்!
நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றி மட்டுமே கொடுக்க் கூடியதொரு வேர்
வெட்டி வேர்!!
இந்த வெட்டி வேர் ஒரு மூலிகை என எல்லோருக்கும் தெரியும்!
இந்த வேரை சிலர் தண்ணீரில் போட்டு வைத்து குடிப்பார்கள்!
சிலர் தேங்காய் எண்ணெய் ஊற வைத்து தலைக்கு தேய்த்து கொள்வார்கள்!
இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது என அனைவருக்கும் தெரியும்! இந்த வெட்டி வேர் மாலையாகவும் கடைகளில் விற்கப்படுகிறது!
இந்த மாலையை வாங்கி வந்து அல்லது தாமே மாலையாகவும் தொடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
இந்த மாலையில் மஞ்சள் தண்ணீர் சிறிது தெளித்து கொள்ள வேண்டும்.
வெட்டி வேர் மாலையை பூஜை அறையில் வைத்து அவரவர் குலதெய்வம் நினைத்து விளக்கு ஏற்றி வணங்கி மனதாரப் பிராத்தனை செய்து கொள்ளவும்.
பின்னர் அவரவர் வீட்டு நிலை வாசலில் மாலையை கட்டி விடுங்கள்விடுங்கள் போதும்!!
வெட்டி வேரின் வாசம் வீடு முழுவதும் பரவி விடும்! வீடு முழுவதும் வாசம் நிறைந்திருக்கும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி விடும்.
எப்போதும் நேர்மையான எண்ணங்கள் செய்திகள் சூழல் எப்போதும் அமையும்.
அதெப்படி என யோசிக்கிறீங்க? இல்லையா!!
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நேர்மை ஆற்றல் அனைத்தும் கவர்ந்து இழுக்கும் தன்மை சக்தி என வெட்டி வேருக்கு உண்டு!! என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீட்டில் எந்தவித பிரச்சினை இருந்தாலும் சரி அது ஒரு சில நாட்களில் சரியாகும்.
உங்களின் பூஜை புனஸ்காரங்கள் தினமும் செய்ய முடியவில்லை என்றாலும் மெல்ல மெல்ல மறைவது நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
ஒரு வேளை வீட்டில் வாசலில் மாலையை கட்ட முடியவில்லை என்றால் பூஜை அறையில் கட்டலாம் அல்லது வைத்து கொள்ளலாம்.
இல்லையெனில் ஏதாவது ஒரு சுவாமி படத்தில் மாட்டி வைத்து கொள்ளலாம்.
வெட்டி வேர் மாலை அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய மாலை!!
இம்மாலை இருந்தால் அது உங்களுக்கு வெற்றியை மட்டுமே தர வல்லது.
வெற்றியை மட்டுமே கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கும் தன்மை கொண்டது வெட்டி வேர்!! வாழ்வில் வளரும் வெற்றியும் பெற அனைவரையும் வாழ்த்துகிறோம்!!
வாழ்த்துக்கள்! நன்றி நண்பர்களே!